11,12ஆம் வகுப்புகளில் அகமதிப்பெண் வழங்கும் அரசாணையை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு

11,12ஆம் வகுப்புகளில் அகமதிப்பெண் வழங்கும் அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில் பள்ளிக்கல்வித்துறை செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

2017-18ஆம் கல்வி ஆண்டு முதல் 11ஆம் வகுப்புத் தேர்வும் பொதுத்தேர்வாக நடத்தப்படும் என தமிழக அரசு கடந்த மே 22ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. இதுதொடர்பாக ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியிட்டப்பட்ட அரசாணை எண் 50ன் படி, 10 மதிப்பெண்கள் அகமதிப்பீடாகவும், 90 மதிப்பெண்கள் தேர்வு அடிப்படையிலும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதனால் செய்முறை தேர்வற்ற மாணவர்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாவதாகவும், அரசணை எண் 50ஐ ரத்து செய்யக் கோரியும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், வழக்கு குறித்து பள்ளிக்கல்வித் துறையின் செயலர், பள்ளிக்கல்வித்துறையின் இயக்குநர், அரசுத்தேர்வுகள் துறை இயக்குநர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன