11ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து மாணவர்கள் அச்சமடையத் தேவையில்லை – செங்கோட்டையன்

11ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு நடத்தப்படுவது குறித்து மாணவர்கள் அச்சமடையத்தேவையில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு காமராஜர்நகரில் கட்டப்பட்ட தரைமட்ட குடிநீர் தொட்டியை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 11ஆம் வகுப்பு பொது தேர்வுக்கு மாதிரி வினாத்தாள் இன்று அறிமுகப்படுத்தப்படும் என்றும், சிறப்பு பயிற்சி அளிக்கப்படுவதன் மூலம் மாணவர்கள் பொதுத்தேர்வை சுலபமாக எதிர்கொள்ள முடியும் என்றும் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன