ஆஸ்., அணிக்கு 43ஓவர்களில் 260 ரன்கள் இழக்கு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

5 ஒருநாள் போட்டி, மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது. இரு அணிகளும் மோதும் முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் பிற்பகல் தொடங்கி பகலிரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது. இந்திய அணி கேப்டன் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்ததை அடுத்து, அஜிங்கிய ரஹானேவும், ரோகித் சர்மாவும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அணியின் ஸ்கோர் 11ஆக இருந்தபோது, கோல்டர் நைல் ((Coulter nile)) வீசிய பந்தில், அஜிங்கிய ரஹானே ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, களமிறங்கிய கேப்டன் கோலி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்த நிலையில், அவருக்கு அடுத்து களமிறங்கிய மணீஷ் பாண்டேவும் டக் அவுட்டானார்.

அடுத்ததாக களமிறங்கிய கேதர் ஜாதவ், ரோகித் சர்மாவுடன் இணைந்து விளையாடிய நிலையில், 44 பந்தில் 28 ரன் எடுத்திருந்த ரோகித் சர்மா ஸ்டொய்னிஸ் ((Stoinis)) பந்தில் ஆட்டமிழந்தார். குல்தீப் யாத்வும் வந்த வேகத்தில் திரும்பி செல்ல, இந்திய அணி 87 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்னர், தோனியுடன் கைகோர்த்த ஹர்டிக் பாண்டியா, இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். அணியின் ஸ்கோர் 205 ரன்களை எட்டியபோது, ஹர்டிக் பாண்டியா 83 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் நிதானமாக ஆடி வந்த தோனி, இன்னிங்ஸின் கடைசி ஓவரில் 79 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். புவனேஷ்வர்குமார் 32 ரன்கள் எடுத்த நிலையில், இந்திய அணி 50 ஓவர்களில் 281 ரன்கள் எடுத்திருந்தது.

பின்னர் மழையின் காரணமாக ஆட்டம் 7 ஓவர்கள் குறைக்கப்பட்டு, ஆஸ்திரேலிய அணிக்கு 260 ரன்கள் இலக்காக நிர்ணயக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!