105வது ஆண்டு விழாவை முன்னிட்டு ரஷ்ய விமானப்படையின் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் விண்ணில் சாகசம்

ரஷ்யாவில் விமானப்படை தினத்தில் ஏராளமான போர் விமானங்கள், ராணுவ ஹெலிகாப்டர்கள் பங்கேற்று நிகழ்த்திய சாகசங்கள் பார்வையாளர்களை பரவசப்படுத்தின. ரஷ்ய விமானப்படை தொடங்கப்பட்ட 105வது ஆண்டு விழாவை முன்னிட்டு தலைநகர் மாஸ்கோவில் வண்ணமிகு நிகழ்ச்சிகள் நடந்தன.

இந்த விழாவில் சு 30 எஸ் எம்., சு 35, மிக் 29 உள்ளிட்ட ரகங்களைச் சேர்ந்த 150 விமானங்கள் பங்கேற்றன. இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட போர் விமானங்கள் முதல் தற்போதைய அதி நவீன போர் விமானங்கள் வரை பெரும்பாலான விமானங்கள் பங்கேற்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன