100 பெண்களும் குழந்தைகளும் நடுரோட்டில் கிடந்த அவலம்

டெல்லியில் நிஜாமுதீன் தர்காவுக்கு அருகே, தற்காலிகக் கூடாரம் இடித்துத் தள்ளப்பட்டதால் 100க்கும் மேற்பட்ட பெண்களும் குழந்தைகளும் வெட்டவெளியிலேயே இரவைக் கழித்தனர். இதனைக் கண்டித்து, டெல்லி நகர வளர்ச்சிக் குழுமத்திற்கு டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், 100க்கும் மேற்பட்ட பெண்களையும் குழந்தைகளையும் நடுரோட்டில் நிற்க செய்த கொடுமை இது என்றும், பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்தின் மிகவும் பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த அடித்தட்டு மக்கள் என்றும் டெல்லி மகளிர் ஆணையம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இச்சம்பவம் குறித்து மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்றும் டெல்லி மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

65 total views, 1 views today

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன