10ஆம் வகுப்பு மட்டுமே முடித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 10ஆம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் இதுவரை 21 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஆத்தூர் அருகே மல்லியக்கரையில் மேலும் ஒரு போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். மல்லியக்கரைப் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக கோவிந்தராஜ் என்பவர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.

சித்தா, ஹோமியோ என பல சான்றிதழ்களை தன் பெயரில் வாங்கி வைத்திருக்கும் கோவிந்தராஜ் மீது சந்தேகமடைந்த சிலர், மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் தெரிவித்தனர். ஆட்சியர் ரோகிணியின் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகள், கோவிந்தராஜின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர் 10ஆம் வகுப்பு மட்டுமே முடித்துள்ளது தெரியவந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன