ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தடை விதிக்க கோரி 10-வது நாளாக போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க வலியுறுத்தி, 10-வது நாளாக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த கர்நாடகாவை சேர்ந்த ஜெம் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதையடுத்து, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, நெடுவாசல் கிராம மக்கள் இரண்டாம் கட்டமாக போராட்டத்தை துவங்கினர். இந்நிலையில், 10-வது நாளான இன்று, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, சிறுவர்கள் அரை நிர்வாணத்துடன் குட்டிக்கரணம் அடித்து ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன