ஹங்கேரி கிராண்ட் பிரி கார் பந்தயம் – ஜெர்மனி வீரர் செபஸ்டியன் வெட்டல் சாம்பியன்

ஹங்கேரி கிராண்ட்பிரி கார் பந்தயப் போட்டியில், ஜெர்மனி வீரர் செபஸ்டியன் வெட்டல் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

நடப்பு சீசனில் 20 கார்பந்தயப் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டு, 11வது கிராண்ட் பிரி கார் பந்தயம் ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்றது.

முன்னணி வீரர்கள் பலரும் பங்கேற்ற இந்தப் பந்தயத்தில், 306 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இலக்கை அடைய வீரர்களிடையே கடும் போட்டி நிலவியது.

ஃபெராரி அணியைச் சேர்ந்த வெட்டலுக்கும், பின்லாந்து வீரர் ரெய்க்கோனன் ஆகிய இருவரில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இறுதியில், வெட்டல் ஒரு மணி 36 நிமிடம் 46 வினாடிகளில் இலக்கை எட்டி கோப்பையைக் கைப்பற்றினார்.

நடப்பு சீசனில் வெட்டல் பெறும் நான்காவது சாம்பியன் பட்டம் இதுவாகும். ரெய்க்கோனன், (Bottas) போட்டஸ், ஹாமில்டன் ஆகியோர் இப்பந்தயத்தில் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனர். போட்டியைக் காணத் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன