ஸ்டாலின் குற்றச்சாட்டை மறுத்தார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

தனியார் மர வியாபாரிகளிடம் சிண்டிகேட் அமைத்து குறைந்த விலைக்கு சில்வர் ஓக் மரங்களை விற்க முயல்வதாக ஸ்டாலின் கூறிய குற்றச்சாடடை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மறுத்துள்ளார்.

தேயிலைத் தோட்டக் கழகம் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை ஒரு மரம் கூட வெட்டப்படவில்லை என்றும், கணக்கெடுப்பு நடத்தி மரத்தில் இலக்கம் எழுதியதை தவறாகப் புரிந்து குற்றம்சாட்டுவதாகவும் அமைச்சர் சீனிவாசன் பதிலளித்துள்ளார். திமுக ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட தேயிலைத் தோட்டக் கழகத்தின் நஷ்டத்தை தற்போது சீராக்கி வருவதாகவும் அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன