ஷ்ரவன் மாதம் சிவபெருமானுக்கு உகந்த மாதம் என நம்பிக்கை – உ.பி.யில் ஆயிரக்கணக்கானோர் தரிசனம்

ஷ்ரவன் புனித மாதத்தை முன்னிட்டு, உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசி, அலகாபாத் ஆகிய இடங்களில் உள்ள சிவாலயங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஷ்ரவன் மாதம் சிவபெருமானை வழிபட உகந்த மாதமாக வட மாநிலங்களில் கருதப்படுகிறது. திங்கட்கிழமைகளில் விரதமிருந்து சிவலிங்கத்திற்கு தண்ணீர் அபிசேஷம் செய்தால் சிவனருள் கிடைக்கும் என பக்தர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். இன்று, ஷ்ரவன் மாதத்தின் நான்காவது திங்கட்கிழமை என்பதால் நேற்று இரவு முதலே நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சிவனை வழிபட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன