Advertisement

வைகை, பல்லவன் ரயில்களில் குறைக்கப்பட்ட பொதுப்பெட்டியை இணைக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி

வைகை, பல்லவன் அதிவிரைவு ரயில்களில் குறைக்கப்பட்ட பொதுப்பெட்டியை மீண்டும் இணைக்கக் கோரிய வழக்கினைத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

வைகை அதி விரைவு எக்ஸ்பிரஸ், பல்லவன் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில்களில் தலா ஒரு பொதுப்பெட்டிகள் முன்பதிவு பெட்டிகளாக மாற்றப்பட்டது. இதனால் ரயிலில் பொதுப் பெட்டியில் செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளதால், பொதுப்பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வேணுகோபால், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, ரயில்வே நிர்வாக முடிவுகளில் பொதுநல வழக்குகள் மூலம் தலையிட முடியாது எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன