Advertisement

வேலை கேட்டு நடிகை நீனா குப்தா 62 வயதில் விண்ணப்பம்

வயதாகிவிட்டதால் புறக்கணிக்கப்படும் நடிகைகளின் பரிதாப நிலையை பிரபல நடிகை ஒருவரின் கோரிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

தேசிய விருது பெற்ற பாலிவுட் நடிகை நீனா குப்தா சமூக ஊடகங்களில் தமக்கு வேலை கொடுக்குமாறு கேட்டு திரையுலகினரிடம் விண்ணப்பித்துள்ளார்.தாம் இன்னும் இறக்கவில்லை என்றும், உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் என்றும் கூறியுள்ள அவர், இன்னும் தம்மால் நடிக்க முடியும் என்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.திரையுலகில் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் சிலகாலம் ஓய்ந்திருந்தால் ஒரேயடியாக ஓய்வு கொடுத்துவிடுவார்கள் என்றும் நீனா குப்தா சமூக வலைதளங்களில் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த பதிவைக் கண்டு உள்ளம் நெகிழ்ந்ததாக நடிகை பிரியங்கா சோப்ரா குறிப்பிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன