வேறு பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட கணவனுக்கு காலணியால் அடி

கர்நாடக மாநிலத்தில் வேறு பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட கணவனை அவரது மனைவி காவல்நிலையத்தில் வைத்தே காலணியால் தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

மருத்துவரான சந்தோஷ் என்பவர் மனைவிக்குத் தெரியாமலும், விவாகரத்து பெறாமலும் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது முதல் மனைவி சுரேகா, தமது உறவினர்களுடன் ஹூப்ளி பகுதியில் உள்ள தரவாடா (Dhrawad) காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து விளக்கமளிக்க காவல்நிலையம் வந்த அவரது கணவரைக் கண்டதும் ஆத்திரத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மனைவி சுரேகா, காலணியைக் கொண்டு சரமாரியாக தாக்கினார். இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கணவரும்,பதிலுக்கு தமது முதல் மனைவியை சரமாரியாகத் தாக்கினார். காவல்துறையினர் வந்து இருவரையும் விலக்கிவிட நேரிட்டது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன