வெள்ளை மாளிகை புல்தரையை சீரமைக்க விரும்பிய 11 வயது சிறுவன் – ஆசையை நிறைவேற்றிய டிரம்ப்

அமெரிக்காவில் வெள்ளை மாளிகை புல்தரையை சீரமைக்க வேண்டும் என்ற சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய அதிபர் டிரம்ப், பெரியனானதும் அச்சிறுவன் அதிபராகக் கூட வரலாம் என ஊக்குவித்தார். FX Mowing என்ற புல்தரை சமன்படுத்தும் இயந்திர விற்பனை நிறுவன உரிமையாளரின் 11 வயது மகன் ஃபிராங்க் கியாசியோ (Frank Giaccio), அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்புக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அதில், வெள்ளை மாளிகைப் புல்தரையை சீரமைக்க விரும்புவதாகவும் அதற்கான வாய்ப்பளிக்குமாறும் கோரியிருந்தார். இதற்கு டிரம்ப் அனுமதியளித்த பின் வெள்ளை மாளிகை சென்று தம் விருப்பப்படி ரோஜா தோட்ட புல்தரையை சீரமைத்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன