வெள்ளத்தில் தவிக்கும் குஜராத் மக்கள் : சொகுசு விடுதியில் குஜராத் காங். எம்.எல்.ஏ.க்கள்

குஜராத் மாநில மக்கள் கடும் வெள்ளத்தில் சிக்கி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அம்மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 44 பேர் பெங்களூருவில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர்.

தொடர் கனமழை மற்றும் வெள்ளப் பாதிப்புகளால் குஜராத் மாநிலத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் மாநிலங்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுக்கு தாவாமல் இருக்க அந்தக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் பெங்களூருவில் உள்ள சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுவதால் எம்.எல்.ஏ.க்களை பாதுகாப்பாக தங்க வைக்க பெங்களூரு தேர்வு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன