வெள்ளத்தில் சிக்கி படுகாயமடைந்த இளைஞர் மீட்பு

குஜராத்தில் வெள்ளத்தில் சிக்கி படுகாயமடைந்த இளைஞரை, இந்திய விமானப் படையினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் காட்சி வெளியாகியுள்ளது.

அசாம், குஜராத், ஒடிசா, அரியானா, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், குஜராத் மாநிலம் பிஸ்மில்லாகர் ((Bismillahgarh)) பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் உடலில் படுகாயகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.

உடலில் பல எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ள அந்த இளைஞரை இந்திய விமானப் படையினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்போனில் எடுக்கப்பட்ட இந்த காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன