வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற சிலைகள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

திருவண்ணாமலையில் இருந்து வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற பழங்கால சிலைகள் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.

கடந்த மாதம் 21 ஆம் தேதி திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சிலை கடத்தல் கும்பலை சேர்ந்த 7 பேரை கைது செய்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், அவர்களிடம் இருந்து சுமார் ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பச்சை நிற மரகத நடராஜர் சிலை, வெண்கல நடராஜர் சிலை, உள்ளிட்ட 6 சிலைகளை பறிமுதல் செய்தனர். இந்த சிலைகள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் திருவண்ணாமலையில் இருந்து கொண்டு வரப்பட்டு, கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. பின்னர் அவை கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன