வெயிலின் தாக்கம் இன்றும் அதிகரிக்க வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக காணப்படும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

கடலோர மாவட்டங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையும், உள்மாவட்டங்களில் 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையும் இயல்பைவிட அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆந்திராவில் இருந்து வீசுகிற வடமேற்குதிசை காற்றால், வடதமிழகத்தில் இயல்பைவிட அதிக வெப்பம் பதிவாகியிருப்பதாக வானிலை மைய இயக்குநர் மேலும் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!