வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கை என டிரம்பின் எச்சரிக்கை வெனிசுலா அதிபருக்கு வலு சேர்க்கும்

வெனிசுலாவில் தவித்துவரும் மக்களைக் காப்பாற்ற அமெரிக்கா, ராணுவத்தைப் பயன்படுத்தும் என்று அதிபர் ட்ரம்ப் எச்சரித்திருப்பது, அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு வலு சேர்க்கும் என கூறப்படுகிறது.

வெனிசுலாவின் அரசியலமைப்பை மாற்றியமைக்க, எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பையும் மீறி அதிபர் மதுரோ நடவடிக்கை எடுத்துள்ளார். இதையடுத்து வெனிசுலா நாட்டு மக்களைக் காப்பாற்ற ராணுவத்தைப் பயன்படுத்த இருப்பதாக டிரம்ப் எச்சரித்திருந்தார். பொதுவாக அமெரிக்காவின் அச்சுறுத்தலைக் கொண்டே வெனிசுலா அதிபர் தமது கொள்கைகளை நியாயப்படுத்துவார் எனக் கூறப்படுவதால், இது அவருக்கு சாதகமாக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

இதனிடையே, டிரம்ப் தமது வேலையைப் பார்க்காவிட்டால், ஆயுதம் கொண்டு வெள்ளை மாளிகையைக் கைப்பற்றுவோம் என வெனிசுலா அதிபரின் மகன் நிகோலஸ் எச்சரித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன