Advertisement

வெகுஜன ஏழைகளுக்கு நிம்மதியளிக்கும் விதமாக GST வரி குறைக்க கர்நாடக அமைச்சர் கவுடா கோரிக்கை

ஏழை மக்களுக்கு நிம்மதியளிக்கும் விதமாக உப்புமா உள்ளிட்ட வெகுஜன மக்கள் பயன்படுத்தும் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியைக் குறைக்க வேண்டும் என கர்நாடக அமைச்சர் கவுடா கோரிக்கை விடுத்துள்ளார்.

பணக்காரர்கள் மற்றும் நடுத்தர மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் வரி குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள அம்மாநில வேளாண்துறை அமைச்சர் பைரே கவுடா (Byre Gowda), வெகுஜன ஏழை மக்கள் பயன்படுத்தும், உப்புமா, சாம்பார் சாதம் உள்ளிட்டவற்றின் மூலப் பொருட்களுடைய விலையைக் குறைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். ஏழை மக்கள் குரல் எழுப்பமாட்டார்கள் எனக் கருதி அவர்களின் கோரிக்கையைப் புறக்கணிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன