வீட்டில் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற கும்பலை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

திருப்பூர் அருகே பனியன் கம்பெனி உரிமையாளர் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற கும்பலை பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

பல்லடம் திருமலை நகரைச் சேர்ந்த வெங்கட்ராமன், அப்பகுதியில் பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இன்று காலை 6 மணியளவில் வெங்கடராமனின் மனைவி கதவைத்திறந்து வெளியே வந்தபோது, வீட்டருகே மறைந்திருந்த கும்பல், போர்வையால் அவரது முகத்தை மூடி வீட்டிற்குள் கொண்டு சென்றுள்ளனர். பின்னர் வெங்கடராமனையும் தாக்கிய அந்த கும்பல், வீட்டிலுள்ள நகை பணம் ஆகியவற்றை எடுத்துத் தருமாறு மிரட்டியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த வெங்டராமன் சத்தம்போட்டதையடுத்து, அங்கு திரண்ட அருகிலிருந்தோர் கொள்ளைக்கும்பலை பிடிக்க முயன்றனர். 6 பேர் தப்பிவிட, 3 பேரை பிடித்த பொதுமக்கள் அவர்களுக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன