விஷால் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் உள்ளிட்ட 11 பேர் மீது, நடிகர் பாபுகணேஷ் உள்ளிட்டோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் விஷால் உள்ளிட்ட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள், தயாரிப்பாளர்களுக்கான கூட்டுறவு வீட்டு வசதி சங்க அலுவலகத்தை, தயாரிப்பாளர் சங்க கட்டிடத்தில் இருந்து அகற்றுமாறு மிரட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நேற்றிரவு தங்கள் அலுவலகத்தில் நுழைந்த தயாரிப்பாளர் சங்கத்தினர் அங்கிருந்த பொருள்கள், ஆவணங்கள் மற்றும் ரூ. 80 ஆயிரம் பணம் ஆகியவற்றை அள்ளிச் சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது. அலுவலகத்தின் பின்பக்கமாக நுழைந்து இந்தச் செயலில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, விஷால், கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ்ராஜ், ஞானவேல் ராஜா உள்ளிட்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் 11 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன