விவசாயிகள் என்ற பெயரில் ஏரியிலிருந்து கிராவல் மண் திருட்டு

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே வண்டல் மண் அள்ளும் விவசாயிகள் என்ற போர்வையில், கிராவல் மண் திருடப்படுவதாக புகார் எழுந்துள்ளது. கீரனூர் கிராமத்தில் உள்ள ஏரியில் விவசாயிகள் வண்டல் மண் அள்ள பொதுப்பணித்துறை அனுமதித்துள்ளது. அங்கு 3 அடிக்கு கீழே கிராவல் மண்ணும் உள்ளது.

இந்நிலையில், 3 அடி ஆழம் மட்டுமே தோண்ட வேண்டுமென்ற விதியை மீறி, சிலர் பொக்லைன் மூலம் 10 அடி ஆழத்துக்கும் மேல் தோண்டி கிராவல் மண்ணை லாரிகளில் திருடி வருவதாக கிராம மக்கள் புகார் கூறியுள்ளனர்.

ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் இதுபோன்று கிராவல் மண்ணை திருடி வருவதாகவும், இதுவரை பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கிராவல் மண் பறிபோனதாகவும் கிராமத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதைத் தடுப்பதோடு, கிராவல் மண் திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன