விரைவில் பதவி விலகுகிறார் அமைச்சர் தாமஸ் சாண்டி – ஏரி நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் கண்டிப்பு

ஏரி ஆக்கிரமிப்பு தொடர்பான குற்றச்சாட்டில் கேரள போக்குவரத்து துறை அமைச்சர் தாமஸ் சாண்டி விரைவில் பதவி விலகக் கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தாமஸ் சாண்டி, மார்த்தாண்டம் என்ற ஏரியின் நிலத்தை ஆக்கிமித்ததாக புகார் எழுந்தது. ஆலப்புழா ஆட்சியரின் அறிக்கையும் இதை ஊர்ஜிதப்படுத்தியது.

இதை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் மனுத்தாக்கல் செய்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், அரசை எதிர்த்து அமைச்சர் எப்படி மனுத்தாக்கல் செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பியது. நீதிமன்றம் தங்களை காப்பாற்ற வேண்டும் என்று சொல்கிறீர்களா? எனக் கண்டித்த நீதிமன்றம், இதுதொடர்பாக தலைமைச் செயலர் தான் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

நெருக்கடி அதிகரிப்பதால் அவர் விரைவில் அமைச்சரவையில் இருந்து விலக கூடும் என்று கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன