விமான விபத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழக்கவில்லை – வரலாற்று ஆய்வாளர் ஜே.பி.பி.மோரே

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், விமான விபத்தில் உயிரிழக்கவில்லை என்பது பிரான்ஸ் நாட்டின் ரகசிய ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக வரலாற்று ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்து, நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஜப்பானுக்கு செல்லும்வழியில் தைவானில் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மத்திய அரசு அமைத்த 3 விசாரணைக்குழுக்களில் 2 குழுக்கள் விமான விபத்தில் நேதாஜி இறந்துவிட்டதாகவும், ஒரு குழு மட்டும் விமான விபத்தில் அவர் இறக்கவில்லை என்றும் கூறியுள்ளது.

இந்நிலையில், பாரீஸை சேர்ந்த வரலாற்று ஆய்வாளரான ஜே.பி.பி.மோரே என்பவர், நேதாஜி விமான விபத்தில் உயிரிழக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தேசிய ஆவணக் காப்பகத்தில் இருந்து தனக்கு ஒரு ஆவணம் கிடைத்துள்ளதாகவும், அதில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் உயிரிழந்ததாக குறிப்பிடப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன