Advertisement

விமான புகையில் ஆபாச படம் வரைந்த விவகாரம் – விமானி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தகவல்

அமெரிக்காவில் விமானத்தின் புகையைக் கொண்டு வானில் ஆபாச உருவம் வரையப்பட்டதை ஏற்றுக் கொள்ள முடியாது என அந்நாட்டு கடற்படை அதிருப்தி தெரிவித்துள்ளது. கடந்த வியாழனன்று வாஷிங்டனில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்படை விமானம், திட்டமிட்ட பாதையைக் கடந்து பயணித்தது.

அந்த விமானம் வெளியிடும் வெண்புகையைக் கொண்டு, வானில் ஆபாச படம் வரையும் வகையில், விஷமத்தனத்தோடு அதை விமானி இயக்கியது தெரியவந்தது. வானில் இந்த உருவம் தெரிந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பரவியதோடு, பெரும் கண்டனத்தையும் சம்பாதித்தது.

இந்த சம்பவத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என, கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது பொறுத்துக்கொள்ளக் கூடிய சம்பவம் அல்ல என்றும், உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன