விமானப்படையின் முதுபெரும் மார்ஷல் அர்ஜன் சிங் காலமானார்

இந்திய விமானப்படையில் முதுபெரும் மார்ஷலான அர்ஜன் சிங் இதய செயலிழப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமானார்.

அவருக்கு வயது 98. 1965-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரில் சிறப்பாக பணியாற்றிய அர்ஜன் சிங்கிற்கு 5 நட்சத்திர தகுதியுடன் ஃபீல்டு மார்ஷல் தரத்துக்கு பதவி உயர்த்தப்பட்டது. மேற்கு வங்க மாநிலம் பனகரில் உள்ள விமானப்படைத் தளத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டது. அர்ஜன் சிங்கிற்கு இதய செயலிழப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் மோடியும், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தராமனும் மருத்துவமனைக்கு சென்று அவரது நலம் குறித்து கேட்டறிந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ராணுவ மருத்துவமனையில் அர்ஜன் சிங் உயிர் பிரிந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!