விப்ரோ மென்பொருள் நிறுவன ஊழியர்கள் 600 பேர் பணிநீக்கம்

நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ, 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. மென்பொருள் சேவை வழங்கி வரும் விப்ரோ, இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனங்கள் வரிசையில் 3ஆவது இடத்தில் உள்ளது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இயங்கி வரும் இந்த நிறுவனத்தில், கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி கணக்கெடுப்பின் படி, சுமார் ஒரு லட்சத்தி 79 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். இதில் 75 சதவீதம் பேர் இந்தியர்கள் என்ற நிலையில், செயல்திறன் மதிப்பீடு அடிப்படையில் 600 பேரை பணிநீக்கம் செய்துள்ளதாக விப்ரோ தெரிவித்துள்ளது. பணிநீக்கம் செய்யப்படுவோரின் எண்ணிக்கை வரும் மாதங்களில் இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுவதால், விப்ரோ ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர். இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பணிகள் செல்வதை தடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருவதால்,விப்ரோ தனது ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து வருவதாக கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன