விதிகளை மீறி கட்டிடம் கட்டி இருப்பதால் ரத்னா ஸ்டோர்ஸ் கடைக்கு சீல்

திருச்சியில் உள்ள ரத்னா ஸ்டோர்ஸ் கடைக்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவுப்படி, அதிகாரிகள் சீல் வைத்தனர்.

திருச்சி என்.எஸ்.பி. சாலையில் உள்ள ரத்னா ஸ்டோர்ஸ் வீட்டு உபயோகப் பொருட்கள் கடையும், அதற்கு அருகே உள்ள மற்றொரு கட்டிடமும் விதிமுறைகள் மீறி கட்டப்பட்டிருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, ரத்னா ஸ்டோர்ஸ் கடை மற்றும் அதற்கு அருகே உள்ள கட்டிடத்திற்கும் சீல் வைக்க உத்தரவிட்டது. இதையடுத்து கடையின் நிர்வாகிகளுக்கு தகவல் அளித்து விட்டு அங்கு சென்ற உள்ளூர் திட்டக்குழும அலுவலர்கள், இரண்டு கட்டிடங்களுக்கும் சீல் வைத்தனர். கடையின் முக்கிய ஷட்டர்களை மூடி சீல் வைக்கப்பட்டதுடன், அறிவிப்பு நோட்டீசும் ஒட்டப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன