விஜயகுமார் எழுதிய வீரப்பன் தொடர்பான நூல் வெளியீட்டு விழா!

முன்னாள் அதிரடிப்டை தலைவர் விஜயகுமார் எழுதியுள்ள சந்தன வீரப்பன் தொடர்பான நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. veerapan chashing the brigand என்ற புத்தகத்தை விஜயகுமார் எழுதியுள்ளார். இதன் வெளியீட்டு விழா சென்னை எழும்பூரில் நடைபெற்றது. நூலை மேற்கு வங்க முன்னாள் ஆளுனர் நாராயணன் வெளியிட முன்னாள் டிஜிபி வால்டர் தேவாரம் பெற்றுக்கொண்டார். விழாவில் சென்னை போலீஸ் ஆணையர் ஜார்ஜ், திரைப்படத் தயாரிப்பாளர் ராம்குமார், நடிகர் சூர்யா, மைலாப்பூர் எம்எல்ஏ ஆர்.நட்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விஜயகுமார், வீரப்பனை சுற்றிவளைத்தது குழு நடவடிக்கை என்றும், இதுதொடர்பான அனைத்து விவரங்களும் புத்தகத்தில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன