வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர் தீபாவளி போனஸ் பிரச்சனை

கோவை மாவட்டம் வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர் தீபாவளி போனஸ் தொடர்பாக நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

வால்பாறை பகுதியில் உள்ள சோலையாறு எஸ்டேட் தொழிலாளர்கள் 20 சதவீத தீபாவளி போனஸ் கேட்டும், நிர்வாகம் வழங்கிய 9 புள்ளி 5 சதவீத போனஸிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கடந்த 6 நாட்களாக வேலைநிறுத்த போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் கோவை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் இதுதொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள், வால்பாறை எம்.எல்.ஏ. கஸ்தூரிவாசு, நிர்வாகம் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், அடுத்த கட்ட பேச்சுவார்த்தை 16 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதேசமயம் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட்டு இன்று முதல் தொழிலாளர்கள் வேலைக்கு திரும்புவதென முடிவு செய்யப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன