வாட்ஸ்ஆப், பேஸ்புக் குழுவில் தவறான தகவல் பதிவிட்டால் சிறை

சமூகவலைதளங்களில் இயங்கும் குழுக்களில் உள்ளவர்கள் தவறான தகவல்களை பதிவு செய்தால், அந்த குழுவின் நிர்வாகி சிறையில் அடைக்கப்படுவார் என வாரணாசி போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வாட்ஸ்ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களை பயன்படுத்துவோர் தங்களுக்குள் ஒரு குழுவை உருவாக்கி, அதில் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். ஒரு குழுவில் பதியப்படும் கருத்துகள், அடுத்தடுத்த குழுக்களுக்கும் பகிரப்படுவதால் வேகமாக பரவுகின்றன. இந்நிலையில், பல்வேறு குழுக்களில் தவறான மற்றும் பொய்யான கருத்துகள் பகிரப்படுவதாக கூறியுள்ள போலீசார், நன்கு தெரிந்த நபர்களை மட்டுமே குழுக்களில் சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். குழுவில் உள்ள நபர் ஒருவர் பொய்யான தகவலை பதிவு செய்தால், அதற்கு குழு நிர்வாகியே பொறுப்பு என எச்சரிகை விடுத்துள்ள வாரணாசி போலீசார், தவறான மற்றும் பொய்யான தகவல்களை பதிவிடும் நபர்களை உடனடியாக குழுவில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன