வாக்குப் பதிவு எந்திரங்களின் நம்பகத் தன்மையை நிரூபித்துக்காட்டுகிறது தேர்தல் ஆணையம்

வாக்குப் பதிவு எந்திரங்களைக் குற்றம்சாட்டும் எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுக்கும் வகையில் அவற்றின் நம்பகத் தன்மையை நிரூபித்துக்காட்டும் நிகழ்ச்சியை தேர்தல் ஆணையம் இன்று நடத்துகிறது. வாக்குப் பதிவு எந்திரங்களில் முறைகேடுகளுக்கான வாய்ப்புகள் குறித்து காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.வாக்குப் பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என டெல்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சவுரப் பரத்வாஜ், மாதிரி வாக்குப் பதிவு எந்திரத்தைக் கொண்டு செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தார்.
இதனால் வாக்குப் பதிவு எந்திரங்களின் நம்பகத் தன்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் தேர்தல் ஆணையத்துக்கு ஏற்பட்டது. இந்நிலையில் மின்னணு வாக்கு எந்திரங்கள் மற்றும் ஒப்புகைச்சீட்டு அளிக்கும் எந்திரங்களின் நம்பகத் தன்மையை நிரூபித்துக்காட்டும் நிகழ்ச்சி இன்று நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன