Advertisement

வாகன சோதனை என்ற பெயரில் போலீசார் வசூல் வேட்டை – மாடுபிடி வீரர்கள் சாலை மறியல்

வாகன சோதனை என்ற போர்வையில் போலீசார் கட்டாய வசூலில் ஈடுபடுவதாகக் கூறி, ஜல்லிக்கட்டு காளைகளுடன் மாடுபிடி வீரர்கள் பெரம்பலூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம் தம்மம்பட்டியைச் சேர்ந்த மாடுபிடி வீரர்கள், 20க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுக் காளைகளை வாகனங்களில் ஏற்றிக் கொண்டு, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்திற்கு வந்துள்ளனர். அங்கு நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்ற பின் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர்களை வழிமறித்த ரோந்து போலீசார், கட்டாய வசூலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

சந்திப்பு பகுதிகளில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வாகனம் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் வீதம் வசூலித்துவிட்டு, அதற்கான தொகையை ரசீதில் குறிப்பிடவில்லை என்றும், போலீசார் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.

வசூல் செய்யப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் திருப்பித் தரப்படும் என போலீசார் உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன