வளர்ச்சி மூலமாக மட்டுமே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியும் – பிரதமர் மோடி

வளர்ச்சி மூலமாக மட்டுமே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியும் என வாரணாசியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, மஹாமனா எக்ஸ்பிரஸ் ரயிலின் சேவையையும் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, திட்டங்களைத் தொடங்கி மட்டும் வைக்காமல், முடிக்கவும் செய்வோம் என பெருமிதத்துடன் கூறினார். ஏழைகளின் கனவை நனவாக்குவதே தங்கள் நோக்கம் என்று கூறிய அவர், வறுமையை ஒழிப்பதே தங்கள் அரசின் கனவு என்றார். நமது நெசவாளர்களுக்கு உலக சந்தையில் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம், அவர்களின் பொருளாதாரம் முன்னேற்றமடையும் எனக் கூறிய அவர், குடிமக்கள் சுயசார்புடன் இருக்க உதவும் விதமாக அரசு பணியாற்றி வருவதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, வாரணாசியில் உள்ள பல்வேறு புனிதத் தலங்களில் மோடி வழிபாடு நடத்தினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன