வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய ஆக.5 வரை கால அவகாசம்

2016 – 2017 நிதி ஆண்டிற்கான வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்ததை அடுத்து ஆகஸ்ட் 5ஆம் தேதி கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கு கீழ் வருமானம் பெறுபவர்கள் நேரடியாகவும், 5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுபவர்கள் இணையதளம் வாயிலாகவும் கணக்கை தாக்கல் செய்து வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் ஏராளமானோர் குவிந்தனர். படிவங்களை பூர்த்தி செய்து நீண்ட வரிசையில் காத்திருந்த அவர்கள் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்து வருகின்றனர்.

இதில், பான் எண், ஆதார் எண் இணைப்பு, தகவல்களில் முரண்பாடு ஆகிய காரணங்களால் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய முடியாமல் தவிப்பதாக சிலர் புகார் தெரிவித்தனர்.
ஆதார் அட்டைக்கான கைரேகை அடையாளத்தில் முரண்பாடு இருந்ததாலும் பலர் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன