வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்

வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய மேலும் அவகாசம் வழங்கப்பட மாட்டாது என வருமான வரித்தறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2016 – 2017 நிதி ஆண்டுக்கான வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள் ஆகும். வருமான வரிக்கணக்குகளை தாக்கல் செய்வதற்கு வசதியாக கடந்த இரண்டு நாட்களாக வருமான வரி அலுவலகங்கள் செயல்பட்டன.

இந்நிலையில் இறுதிக்கெடுவை நீட்டிக்குமாறு பல்வேறு கோரிக்கைகள் வந்ததாகக் கூறியுள்ள வருமான வரித்துறை அதிகாரிகள், திங்கள் கிழமைக்குப் பின், கால நீட்டிப்பு செய்யப்படமாட்டாது என அறிவித்துள்ளனர். www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தில் பதியலாம் எனவும் அறிவித்துள்ளனர். இறுதி நேர அவசரத்தை தவிர்க்க முன்கூட்டியே தாக்கல் செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன