வனப்பகுதியில் எந்த மரமும் கடத்தப்படவில்லை : மாவட்ட வன அதிகாரி

கொடைக்கானல் கீழ்மலை கிராம வனப்பகுதிகளில் சமீபகாலமாக மரம் வெட்டி கடத்துவதாக வந்த செய்தி தவறானது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்ட வனப்பகுதியில் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் பட்டா நிலங்கள் அமைந்துள்ளது. இம்மலைப்பகுதிகளில் மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் மரங்களை வெட்டுவதற்கு மாவட்ட அளவிலான குழுவிடம் அனுமதி பெற வேண்டும் என்று கூறிய மாவட்ட வனத்துறை அதிகாரி வெங்கடேஷ், வனப்பகுதியில் முதிர்ச்சியடைந்து விழுந்த மரங்களே அகற்றப்படுவதாக தெரிவித்தார்.

மேலும் வனப்பகுதிகளுக்குள் மரம் வெட்டி கடத்தப்படுவதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன