வடசென்னை அனல் மின்நிலையத்தில் பராமரிப்புக்காக மின் உற்பத்தி நிறுத்தம்

வடசென்னை அனல் மின்நிலையத்தில் ஆண்டு பராமரிப்புக்காக இரண்டு அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தபட்டதால் 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

வடசென்னை அனல் மின்நிலையத்தில் 5 அலகுகள் மூலம் நாள்தோறும் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நிலை ஒன்றில் முதல் அலகில் நேற்று கொதிகலன் குழாய் பாதிப்பு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இது சரி செய்யப்பட்டு இன்று மின்னுற்பத்தி தொடங்கியது.

இந்நிநிலையில் ஆண்டுப் பராமரிப்புப் பணிகளுக்காக நிலை ஒன்றின் அலகு மூன்றில் 210 மெகாவாட்டும் நிலை இரண்டின் முதல் அலகில் 600 மெகாவாட்டும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

விரைவில் பராமரிப்புப் பணிகள் முடிந்து மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன