வடகொரிய சிறையிலிருந்து விடுதலையான கனடா பாதிரியார் முதன்முறையாக மக்கள்முன் உரை

வடகொரியா சிறையில் அடைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட கனடாவைச் சேர்ந்த பாதிரியார், முதல்முறையாக மக்கள் முன் உரையாற்றினார். ஹியோன் சூ லிம் ((Hyeon Soo Lim)) என்ற அந்த பாதிரியார், கடந்த 2015-ம் ஆண்டு வடகொரிய நீதிமன்றத்தால் தேச விரோதி என குற்றம்சாட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். 31 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த அவர், கடந்த வாரம் விடுவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, சொந்த நாடு திரும்பிய ஹியோன் சூ லிம், கனடாவின் மிசிசாகா ((Mississauga)) நகரில் உள்ள தேவாலயத்தில் உரையாற்றினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன