வடகொரியா விவகாரத்தில் இந்தியா உதவி செய்ய வேண்டும் – அமெரிக்கா

வடகொரிய விவகாரத்தில் இந்தியா உதவி செய்ய வேண்டும் என்று அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.

உலக அரங்கில் இந்தியாவின் குரல் ஓங்கி ஒலிக்கும் தன்மை கொண்டது என்பதால், அமெரிக்காவின் நிலையை இந்தியா புரிந்து கொள்ளும் என தான் நம்புவதாக அமெரிக்காவின் பசிபிக் பிராந்திய தளபதி ஹாரி ஹாரிஸ் (Harry Harris) தெரிவித்துள்ளார். மேலும் வடகொரியா தொடர்பாக தற்போதுள்ள, நிலைமையின் தீவிரத்தை இந்தியா உணர்ந்து கொள்ளும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அணு சக்தியின் அச்சுறுத்தலை புரிந்து கொள்ளும் தன்மை இந்தியாவிடம் இருப்பதால், வடகொரிய நெருக்கடியைத் தவிர்க்க முடியும் என்பதை தான் உணர்ந்துள்ளதாவும் ஹாரி ஹாரிஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, வடகொரியா இடையே போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில் அமெரிக்கா முதன் முறையாக இந்தியாவிடம் உதவி கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன