வடகொரியா தாக்குதலை வீழ்த்த ஏவுகணை தடுப்பு அமைப்புகளை நிறுவியது ஜப்பான்

குவாம் தீவு மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும் என்று வடகொரியா எச்சரித்த நிலையில், ஜப்பான் தனது எல்லையில் ஏவுகணை தடுப்பு அமைப்பை நிறுவ தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் படைகள் உள்ள குவாம் தீவுக்கு வடகொரியா ஏவுகணையை ஏவினால், அந்த ஏவுகணை ஜப்பானைக் கடந்து செல்லும்.

இதன் காரணமாக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தாக்கி அழிக்க வல்ல, பி.ஏ.சி -3 ((PAC 3)) பேட்ரியாட் ரக ஏவுகணை தடுப்பு அமைப்பை, ஷிமானே, ((Shimane, Hiroshima a)) ஹிரோஷிமா உள்ளிட்ட இடங்களில் ஜப்பான் நிறுவியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன