வடகொரியா-அமெ., விவகாரத்தில் தலையிட வேண்டாம் – இங்கிலாந்துக்கு எதிர்க்கட்சித் தலைவர்

வடகொரியா-அமெரிக்கா விவகாரத்தில், இங்கிலாந்து அரசு தலையிட வேண்டாம் என அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் ஜெரேமி கோர்பைன் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவை ஆளும், டிரம்பின் நிர்வாகத்துக்கு குருட்டுத் தனமான விசுவாசத்தைக் காட்ட வேண்டாம் எனவும் அவர், இங்கிலாந்து ஆட்சியாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். கொரியாவில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க இங்கிலாந்து உதவலாம் என்றும், மாறாக அந்த பிரச்சனையில் இங்கிலாந்தை நுழைத்திட வேண்டாம் என்றும் ஜெரேமி கோர்பைன் கூறியுள்ளார். எந்த நாட்டுக்கும் ஆதரவாக போர் ஒத்திகையில் கூட இங்கிலாந்து ஈடுபட வேண்டாம் என்றும் ஜெரேமி கோர்பைன் வலியுறுத்தியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன