வடகொரியா – அமெ., இடையே போர் பதற்றம்: தென்கொரியா அதிபரை சந்திக்கிறார் அமெ., ராணுவ உயரதிகாரி

வடகொரியாவுடனான பதற்றத்துக்கு இடையே, தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னை, அமெரிக்காவின் ராணுவ உயரதிகாரி ஒருவர் சந்தித்து பேசவுள்ளார்.

குவாம் தீவை தாக்கப் போவதாக வடகொரியா மிரட்டியதை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப், தங்கள் ராணுவம் தயார் நிலையில் இருப்பதாக எச்சரித்தார். இதனால் அமெரிக்கா – வடகொரியா இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கா ராணுவ உயரதிகாரி ஜோஷப் டன்ஃபோர்டு ((Joseph Dunford)) ராணுவ அதிகாரிகளுடன் தென் கொரியா சென்று, அந்நாட்டு அதிபர் மூன் ஜே இன்னை திங்கட்கிழமை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இதன் பின்னர் ஜோஷப் டன்ஃபோர்டு சீனா செல்லவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன