வடகொரியா அணு ஆயுத சோதனைக்கு உதவுபவர்கள் கண்டறியப்பட வேண்டும் – சுஷ்மா ஸ்வராஜ்

வடகொரியாவின் அணு ஆயுத சோதனைக்கு உதவி செய்பவர்கள் கண்டறியப்பட வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாஸ்வராஜ் வலியுறுத்தியுள்ளார்.

வடகொரியாவுக்கு பாகிஸ்தான் அணு ஆயுத தொழில் நுட்பங்களை பகிர்ந்து வருவதாக நீண்ட காலமாக கூறப்பட்டு வருகிறது. இது தொடர்பான தகவல்களை பாகிஸ்தான் அணு விஞ்ஞானிகளான அப்துல் காதிர்கான், பெர்வேஸ் ஹூத் போய் ஆகியோரும் வெளியிட்டனர். இந்நிலையில் நியூயார்க்கில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் வெளியுறவு அமைச்சர்களுடனான கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்றார்.

அப்போது அவர் பாகிஸ்தானின் பெயரைக் குறிப்பிடாமல் வடகொரியாவின் அணு ஆயுத சோதனையுடன் தொடர்புடையவர்கள் கண்டறியப்பட வேண்டும் என்றும் அவர்கள் வடகொரியாவின் அணு ஆயுத சோதனைக்கு கண்டிப்பாக பொறுப்பாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்ததாக வெளியுறவுத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன