வடகொரியாவுக்கு கடுமையான அழுத்தம் கொடுக்க தென்கொரியா, அமெரிக்கா உறுதி

வடகொரியாவுக்கு கடுமையான அழுத்தம் கொடுக்க, தென்கொரியாவும், அமெரிக்காவும் உறுதி பூண்டுள்ளன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்-னும் தொலைப்பேசியில் உரையாடிய போது, வடகொரியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் இருநாடுகளும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்ததாக தென்கொரியா தெரிவித்துள்ளது. தூதரக ரீதியில் வடகொரியாவை ஒதுக்கி வைப்பது, மேலும் பல பொருளாதார தடைகள் விதித்து வடகொரியாவுக்கு கடுமையான அழுத்தம் கொடுக்கவும் இருநாட்டு தலைவர்களும் உறுதி எடுத்துக் கொண்டதாக தென் கொரிய அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன