Advertisement

வடகொரியாவில் இருந்து இறக்குமதியை அதிரடியாக குறைத்தது சீனா

ஐநா விதித்த பொருளாதாரத் தடையால் வடகொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை, சீனா 38 சதவீதம் குறைத்துள்ளது.

தொடர் ஏவுகணை சோதனைகள் மூலம் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை வட கொரியா அச்சுறுத்தி வந்ததை தொடர்ந்து, ஐநாவில் அந்நாட்டிற்கு எதிராக பொருளாதார தடை கொண்டுவரப்பட்டது.

வடகொரியாவில் இருந்து இரும்பு, நிலக்கரி, கடல் உணவுகள் உள்ளிட்டவற்றை மற்ற நாடுகள் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டன. இதனால், வடகொரியாவில் இருந்து அதிகளவு பொருட்களை இறக்குமதி செய்வதை படிப்படியாக குறைத்து வந்த சீனா, செப்டம்பர் மாதத்தில் மட்டும் 38 சதவீதம் அளவிற்கு கட்டுப்படுத்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன