வடகொரியாவின் ரகசிய நீர்முழ்கி ஏவுகணை தளத்தை படம் பிடித்தது அமெரிக்க உளவு செயற்கைக்கோள்

வடகொரியாவின் நீர்மூழ்கி ஏவுகணை தளத்தை அமெரிக்க உளவு செயற்கைக் கோள் படம் பிடித்துள்ளது. கடலை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள இந்த தளம் சாதாரணமாக விமானத்தில் இருந்து பார்க்கும்போது, தெரியாதவாறு அமைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த தளத்தில் இருந்துதான் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புக்குக்சாங் 1 ((Pukguksong 1)) என்ற ஏவுகணையை வடகொரியா ஏவியதாகவும், கடலுக்கு அடியில் உள்ள இந்த தளத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஏவுகணைகள் மூலம் ஜப்பான், தென்கொரியா மற்றும் தங்களையும் தாக்க முடியும் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.

கடலுக்குள் நீண்ட தூரம் மறைந்திருந்து பயணிக்கும் ஏவுகணைகள் திடீரென வானில் பறந்து சென்று எதிரி நாடுகளைத் தாக்கும் வல்லமை கொண்டது என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன