வடகிழக்குப் பருவமழைக்கான அறிகுறி தோன்றவில்லை – சென்னை வானிலை மையம்

வடகிழக்குப் பருவமழைக்கான அறிகுறி தோன்றவில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், மத்தியக் கிழக்கு வங்கக் கடலில் வழிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் புதுவையில் அனேக இடங்களில் மித மழையும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்துள்ளதாகத் தெரிவித்தார். அடுத்த 2 நாட்களில் தமிழகம் புதுவையில் அனேக இடங்களில் மித மழைக்கும் மேற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழைக்கும் வாய்ப்பிருப்பதாக அவர் கூறினார்.

சென்னையில் அடுத்த இரு நாட்களில் ஓரிரு முறை மித மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தென்மேற்குப் பருவமழை முழுவதுமாக விலகவிலை என்றும் நான்கைந்து நாடகளில் படிப்படியாக விலகும் என்றும் கூறிய அவர், வடகிழக்குப் பருவமழைக்கு இன்னும் அறிகுறி தோன்றவில்லை என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன