வசாங்-12 ஏவுகணை சோதனையை பார்வையிட்டார் வடகொரிய அதிபர்

வடகொரிய அதிபர் ((Hwasong-12)) வசாங்-12 ஏவுகணை சோதனையைப் பார்வையிடும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மிகவும் உற்சாகமாகக் காணப்படும் வடகொரிய அதிபர் ((Kim Jong Un)) கிம் ஜாங் உன், ஏவுகணை சோதனையைப் பார்வையிடுவது போலவும் கணினியில் ஏவுகணை செல்லும் பாதையைப் பார்ப்பது, ராணுவ அதிகாரிகளுடன் கைகுலுக்குவது போலவும் உள்ள அந்த புகைப்படங்களில் தேதியோ இடமோ குறிப்பிடப்படவில்லை. வடகொரியாவின் இந்த ஏவுகணை ஜப்பானின் வான்வெளியில் பறந்து பசிபிக் பெருங்கடலில் விழுந்ததாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன